கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கத்தின் ஆண்டு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. ரோட்டரி சங்க தலைவர் ரவி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் அன்பழகன் வரவேற்புரை வழங்கினார். சங்க செயலாளர் வின்சென்ட் ஆண்டறிக்கையை வாசித்து, கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சமூக சேவை நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட துணை ஆளுநர் சுரேஷ் துவக்க உரையாற்றி, ரோட்டரி சங்கம் சமூக நலனில் ஆற்றிவரும் சேவைகளை பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் சிவசுந்தரம் அவர்கள், உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கம் கல்வி, மருத்துவம் மற்றும் சமூக நலத் துறைகளில் தொடர்ந்து செய்து வரும் சேவைகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், உளுந்தூர்பேட்டை தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் கேடயங்கள் வழங்கி கௌரவித்தார். மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு இதுபோன்ற பாராட்டு விழாக்கள் பெரும் ஊக்கமாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் துணை ஆளுநர்கள் திலீப், வருங்கால துணை ஆளுநர் செந்தில்குமரன் மற்றும் அன்பழகன், முன்னாள் தலைவர்கள் வசந்தகுமார், மோகன்ராஜ், தெய்வீகன், இரமேஷ்பாபு, வெங்கடாஜலபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினர்.
மேலும் நிர்வாகிகள் முத்துக்குமாரசாமி, ராஜேந்திரன், அருள், சாமிநாதன், ஜெகதீஷ், கார்த்திகேயராஜா, வழக்கறிஞர் அருள், சுப்பிரமணியன், சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக சங்க பொருளாளர் தர்மலிங்கம் நன்றி கூறினார்.
D.செல்வம்
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்
தமிழக குரல்.

No comments:
Post a Comment